புத்ரா ஜெயா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓர் அமைச்சின் தலைமைச் செயலாளரையும் அவரின் மகன்கள் இருவரையும் விசாராணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைத்தது.
அரசு உயர் அதிகாரி அவரின் 34, 29 வயது மகன்களுடன் காலை மணி 9.38க்கு நீதிமன்றம் வந்தார்.
அவர்களை செக்ஷன் 117-இன்கீழ் 14 நாள் தடுத்து வைக்க அரசுத்தரப்பு வழக்குரைஞர் அஹ்மர் அக்ராம் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், நீதிபதி நிக் இஸ்ஃபானி தஸ்னிம் வன் அப் ரஹ்மான் ஏழு நாள்களுக்கு மட்டுமே அவர்களைத் தடுக்க வைக்க உத்தரவிட்டார்.
தலைமைச் செயலாளர், அதிகாரமீறல், கையூட்டு உள்பட பல குற்றங்களுக்காக நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரின் மகன்கள் இருவரும் அவருக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நாதாரிகள் இதில் தான் ஊழல் செய்ய வில்லை? நம்பிக்கை நாயகனே இதில் தலைமை -பிறகு மற்றவர்களை கேட்க வேண்டுமா? எத்தனை ஊழல் பதவி பீடங்கள்?