அன்வார்- ஆதரவு கூட்டத்துக்கு வருவோருக்குப் பணமா? மறுக்கிறது டிஏபி

dapஅடுத்த   வாரம்   பிகேஆர்   பெருந்  தலைவர்   அன்வார்   இப்ராகிமுக்கு     ஆதரவு   தெரிவிக்கும்    கூட்டத்தில்    கலந்துகொள்வோருக்கு    ஆளுக்கு   ரிம50  கொடுக்கப்படும்    என்று   கூறும்    இணையச்  செய்தியை   பினாங்கு    டிஏபி   மறுக்கிறது.

வாட்ஸ்எப் பில்  வந்த   அனாமதேய    செய்தியை    நம்பி   KLxpress  அச்செய்தி யை   வெளியிட்டிருக்கிறது      என  மாநில   டிஏபி   விளம்பரப்   பிரிவு   உதவிச்   செயலாளர்   ஷேர்லீனா   அப்துல்   ரஷிட்   கூறினார்.

ஜனவரி   9-இல்      நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்சுக்கு    எதிரான     அவதூறு    வழக்குக்காக    அன்வார்   பினாங்கு     உயர்   நீதிமன்றத்துக்கு    வரும்போது    அவருக்கு    ஆதரவு    தெரிவிக்க    நீதிமன்றம்     வரும்     ஆதரவாளர்களுக்கு  டிஏபி   ரிம50   வழங்கும்    என்று    அச்செய்தி   கூறிற்று.  அன்வார்  இப்போது  குதப்புணர்ச்சி  வழக்கில்   ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனையை    அனுபவித்து  வருகிறார்.

“இந்த  ஒருதலைச்சார்பான   செய்தி பொய்யானது,  ஏமாற்றும்   நோக்கங்  கொண்டது,      தேவையற்ற  குழப்பத்தை   ஏற்படுத்தக்   கூடியது.

“இப்படி   பொய்களைப்   பரப்புவது  முறைகேடான    செயல்”,  என்றாரவர்