‘பாஹ்ரியிடம் எம்ஏசிசி மன்னிப்பு கேட்க வேண்டும்’

bahri தப்பான    அறிக்கை    வெளியிட்டதற்காக   மலேசிய   ஊழல்தடுப்பு     ஆணையம்  (எம் ஏசிசி)    அதன்  முன்னாள்   இயக்குனர்    பாஹ்ரி  முகம்மட்  ஸின்னிடமும்    பொதுமக்களிடமும்   மன்னிப்பு   கேட்க    வேண்டும்  என   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்   வழக்குரைஞர்   ஹனிப்   காத்ரி   அப்துல்லா   வலியுறுத்தினார்.

எஸ் ஆர்சி   புலனாய்வும்மீது    தாம்    தெரிவித்த    கருத்துகள்   தொடர்பில்   எம்ஏசிசியின்   ஊடகப்  பிரிவு   தம்மைத்    தொடர்புகொண்டதே  இல்லை   என்று   பாஹ்ரி   மறுத்திருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது   அவர்  இவ்வாறு  சொன்னார்.

“பாஹ்ரியின்    அறிக்கையிலிருந்து  ஊடகப்  பிரிவோ    வேறு    யாருமோ      விளக்கம்     கேட்க    அவரைத்   தொடர்பு  கொண்டதில்லை  என்பது   தெளிவாகத்    தெரிகிறது”,  என   ஹனிப்    முகநூலில்   கூறினார்.

எனவே,   எம்ஏசிசி  வெளியிட்டது  “பொய்யான,   தவறான   தகவலைத்   தரும்   அறிக்கை”,   என்றவர்   குற்றம்  சாட்டினார்.

பாஹ்ரி,  எஸ்ஆர்சி    விவகாரம்   தொடர்பில்   ஏற்பட்ட   ஏமாற்றத்தால்   முன்கூட்டியே    பணி ஓய்வு   பெறுவதாகக்    கடந்த   புதன்கிழமை     தெரிவித்திருந்தார்.

அதற்கு  உடனடியாக     எதிர்வினை    ஆற்றிய   எம்ஏசிசி   தான்    பாஹ்ரியைத்   தொடர்புகொண்டு    பேசியதாகவும்      முன்கூட்டியே    பணிஓய்வு    பெறுவதற்கு  எஸ்ஆர்சி   விவகாரத்தில்    ஏற்பட்ட   ஏமாற்றம்தான்    காரணம்   என்று    சொல்லவே   இல்லை    என்றவர்   கூறியதாகவும்     தெரிவித்திருந்தது.

பாஹ்ரி,  அதிகாரப்பூர்வமாக     பணிஓய்வுக்கு   இன்னும்   இரண்டாண்டுகள்   இருக்கும்போதே,    ஜனவரி   2-ல்   பனிஓய்வு   பெற்றார்.   அவர்   எம்ஏசிசி-இலும்    அதற்கு  முன்பிருந்த  ஊழல்-எதிர்ப்பு   வாரியத்திலும்   30ஆண்டுகளுக்குமேல்   பணியாற்றியுள்ளார்.