பாஸ் கட்சி, ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்ட( சட்டம் 355)த்துக்குக் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு ஆதரவாக பிப்ரவரி 18-இல் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இன, சமய, அரசியல் வேறுபாடின்றி அனைத்து மலேசியரும் அதில் கலந்துகொள்ளலம் என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
சுமார் 300,000 பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்றவர் எதிர்பார்க்கிறார்.
“இப்பேரணி மக்களின் ஐயப்பாடுகளையும் கவலைகளையும் களைவதற்கு உதவும்”, என இன்று ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் துவான் இப்ராகிம் கூறினார்.
பேரணியை டட்டாரான் மெர்டேகாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான அனுதிக்காகக் காத்திருக்கிறார்கள்.
இந்த நாதாரிகளுக்கு அவ்வளவு பகுத்தறிவு இல்லை என்பதே நிச்சயம். வேறு என்ன சொல்ல?