கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைவராக ஜோகூர் பாரு எம்பி ஷாரிர் அப்துல் சமட்டின் திடீர் நியமனம் அங்கு நிலைமை சரியில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.
அந்நிறுவனத்தில் நிர்வாகக் கோளாறுகள் நிகழ்துள்ளதாகக் கூறிய அவர், அவை அம்பலப்படுத்தப்பட்டு வரும் வேளையில் இந்நியமனம் நடந்துள்ளது அப்படித்தான் நினைக்க வைக்கிறது என்றார்.
அந்நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளைத் தொடர்ச்சியாக தாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பதாக ரபிசி கூறினார். ஆனால், முன்னாள் தலைவர் இசா அப்துல் சமட் அவற்றுக்குப் பதிலளித்ததே இல்லை.
“ஷாரிரின் திடீர் நியமனம், பெல்டா கடுமையான நிதிப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் இசாவின் திறமைக்குறைவான நிர்வாகத்தால் அம்னோவுக்குக் குடியேற்றக்காரர்களின் ஆதரவு சரிவு கண்டிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது”, என ரபிசி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆனால். இசா இடமாற்றம் செய்யப்படுவது மட்டும் போதாது. பெல்டா பிரதமர்துறையின்கீழ் இருப்பதால் அதில் நிகழ்ந்த பிழைகளுக்குப் பிரதமர் என்ற முறையில் நஜிப்தான் பொறுப்பு என்றாரவர்.
“அந்த வகையில் பெல்டாவையும் அதில் குடியேறியவர்களையும் மேம்படுத்தத் தவறியதற்காக அவர் பதவி விலக வேண்டும்”, என ரபிசி குறிப்பிட்டார்.
ஷாரிருக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்ட ரபிசி, புதிய தலைவர் அந்நிறுவனத்தை அலைக்கழிக்கும் பிரச்னைகள் குறித்து தாம் தெரிவிக்கும் கருத்துகளைத் திறந்த மனத்துடன் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.
டேய் நீங்க எதைடா ஒழுங்காக செய்தீர்கள்? நாட்டையே நாற அடித்து ஒற்றுமையை குலைத்து பொருளாதாரத்தை மலாய்க்கார சிலரின் கையில் கொடுத்து பணக்காரனாக்கியதுதானே உங்களின் சாதனை.
எந்தக் காலத்திலும் அங்கு நிலவரம் சரியில்லை தான்! சீக்கிரம் ஷாரிரை மூட்டை கட்டிவிடுவார்கள்!