மீண்டும் பிரதமரா? …இல்லை, இல்லை என்கிறார் மகாதிர்

 

Mnotforpmஎதிரணியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராக ஆய்வுகள் காட்டினாலும் தாம் திரும்பவும் பிரதமர் பதவிக்கு வரும் சாத்தியத்தை முன்னாற் பிரதமர் மகாதிர் நிராகரித்தார்.

இன்ஸ்டியுட் டாருல் ஏசான் கடந்த டிசம்பரில் மேற்கொண்ட ஓர் ஆயவில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்மைவிட மகாதிர் பிரதமராவதற்கு அதிகமான மலாய்க்காரர்களின் ஆதரவு இருப்பது தெரியவந்தது.

அந்த ஆய்வின் முடிவு குறித்து இன்று வினவப்பட்டபோது, “இல்லை, இல்லை… நான் போட்டியிட மாட்டேன் (பொதுத் தேர்தலில்) என்று கூறியுள்ளேன்” என்று மகாதிர் இன்று ஷா அலாமில் கூறினார்.

யார் பிரதமர் என்பது பற்றி இன்னும் விவாதிக்கப்படவே இல்லை என்று கூறிய அவர் இப்போததைக்கு முக்கியமானது வெற்றி பெறுவதான்.

நாம் வெற்றி பெறும் வரையில் பிரதமர் பற்றிய கேள்வி எழவில்லை என்றார் மகாதிர்.