ஊழல் அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டணை, தாய்லாந்து சிந்திக்கிறது

 

Thailanddeathpenaltyதாய்லாந்தில் தேசியச் சீர்திருத்த வழிகாட்டுதல் மன்றம் (NRSA) முன்மொழிந்துள்ள கடுந்தண்டணை அளிக்கும் சட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அரசாங்க அதிகாரிகள் தூக்கில் தொங்க வேண்டி வரும்.

முன்மொழியப்பட்டுள்ள தண்டணையின்படி ஓர் அரசாங்க அதிகாரி இலஞ்சம் பெற்று நாட்டிற்கு ஒரு மில்லியன் பாட் இழப்பை ஏற்படுத்தினால் அந்த அதிகாரிக்கு மரண தண்டணை விதிக்கப்படலாம்.

முன்மொழியப்பட்டுள்ள இத்தண்டணை சட்டம் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

“NRSA இந்த முன்மொழிதலை ஜனவரி 9 இல் விவாதிக்கும்” என்று அந்த அமைப்பின் தலைவர் தின்னப்பன் நகதா கூறினார். 200 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மன்றத்தில் இந்த முன்மொழிதல் மீது காரசாரமான விவாதம் நடக்கும் என அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.