நஸ்ரி: பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை மசீச நிறுத்த முடியாது

 

MCAPASrallyஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்குக்கான திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பாஸ் கட்சி நடத்தும் பேரணியை மசீச எதிர்க்க முடியாது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார்.

ஒரு பேரணியை நடத்துவது பாஸின் ஜனநாயக உரிமை என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மேலும் கூறினார்.

“மசீச ஒப்புக்கொள்ள மறுக்க முடியாது ஏனென்றால் அமைதியாக ஒன்றுகூடுதல் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. நான் சட்ட அமைச்சராக இருந்த போது இயற்றப்பட்ட சட்டம் (அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012).

சட்ட அடிப்படையில் ஒன்றுகூடுதலை ஒவ்வொருவரும் ஏற்பாடு செய்வதற்கான உரிமையை அனுமதிக்கும் சட்டம் நம்மிடம்  இருக்கிறது என்று நஸ்ரி கோலாலம்பூரில் கூறினார்.

ஆனால், பெப்ரவரி 18 இல் நடத்த பாஸ் திட்டமிட்டிருக்கும் பேரணி தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அதற்கு மசீச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மசீச விரும்பினால், பாஸ் கட்சியின் பேரணிக்கு எதிரான பேரணியை நடத்தலாம், ஆனால் அது சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

பாஸ் கட்சியின் பேரணியில் பங்கேற்கும் அம்னோ உறுப்பினர்கள் மீது அம்னோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்று  அவர் உறுதியாகக் கூறினார்.