உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய முன்னாள் சிஇஓ ஊழலுக்காக கைது செய்யப்பட்டார்

 

Detainedஅரசாங்க நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முரை அதிகாரி உம்ராவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மறுநாளான இன்று இலஞ்ச ஊழல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு மத்திய அமைச்சின் தலைமைச் செயலாளருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த முன்னாள் தலைமைச் செயலாளரின் இரு மகன்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரொக்கமாக பல மில்லியன் ரிங்கிட்களும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரியும் அமைச்சின் தலைமைச் செயலாளரும் ஒரே அரசாங்க நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி ரிம30,000 க்கும் கூடுதலான தொகையை இலஞ்சமாகப் பெற முயன்றதாக அவர் மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்று விசாரணையில் நெருக்கமான வட்டாரம் கூறிற்று.

ஷா அலாம், புக்கிட் பண்டாராயாவிலுள்ள அவரது இல்லத்தில் 63 வயதான இந்த முன்னாள் சிஇஒ கைது செய்யப்பட்டார்.