இன்று ஒரு வழக்கில் கலந்துகொள்ள பினாங்கு உயர் நீதிமன்றம் வந்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்க சுமார் 500 பேர் பினாங்கு நகர மண்டபத்துக்குமுன் திரண்டனர்.
காலை மணி 9 அளவில் அவர்கள் அங்கிருந்து நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். வழி நெடுகிலும் “அன்வாரை விடுவி”, “ரிபோர்மாசி” என்றும் ரிபோர்மாசி தொடர்பான மற்ற சுலோகங்களையும் முழங்கியவாறே சென்றனர். அக்கூட்டத்தில் பாயான் பாரு எம்பி-யும் இருந்தார்.
இதனிடையே, பினாங்கு உயர் நீதிமன்றம் 4 அன்வார்- ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு இருக்கை கிடைக்காதவர்கள் வழக்குமன்றத்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
கட்சித் தலைவர்கள் பலருடன் முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் நீதிமன்றத்தில் காணப்பட்டார்.
தாம் பணச்சலவை நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறும் கட்டுரைகளை வெளியிட்ட நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) நாளேட்டுக்கும் இதர மூவருக்கும் எதிராக அன்வார் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்குத்தான் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
அம்னோ அன்வரை எப்படியாவது அடுத்த தேர்தல் முடியும் வரை உள்ளேயே வைத்திருக்க எல்லாம் செய்வார்கள் — நீதி தேவன்கள் எல்லாமே அம்னோ குஞ்சுகள் -வேறு என்ன நடக்கும்? எல்லாமே அரசியல் ஆன போது நீதிக்கு வேலை இல்லை.