பேங்க் நெகரா நெகரா (பிஎன்எம்) எடுத்துள்ள நடவடிக்கைகள் ரிங்கிட்டின் மதிப்பை நிலைப்படுத்த உதவும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நம்புகிறார்.
ரிங்கிட்டின் ஏற்ற இறக்கம் பலருக்குக் கவலை தந்திருக்கலாம் ஆனால் அந்நிலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய ஒன்று என்றாரவர்.
மலேசியா மட்டுமல்லாமல் உலகின் 149 நாணயங்களில் 123 அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்புக் குறைந்துள்ளன என நிதி அமைச்சருமான நஜிப் கூறினார்.
மூன்று காரணங்களால் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்துள்ளது. “அயல்நாட்டுச் சந்தைகளில் நடக்கும் அளவுமீறிய ஊகவணிகம்”, எண்ணெய் விலை வீழ்ச்சி, டிசம்பர் மாதம் அமெரிக்க வட்டி விகிதம் உயர்ந்தது ஆகியவை அதற்கு வழிகோலியதாக நஜிப் குறிப்பிட்டார்.
“பிஎன்எம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் ரிங்கிட்டின் மதிப்பு விரைவில் நிலைப்படும் என்று சந்தை நம்புகிறது”, என்றாரவர். நஜிப் இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர்துறையின் மாதாந்திர ஒன்றுகூடலில் உரையாற்றினார்.
நிலையா இருக்கும் ஆனால் ஒரு அமெரிக்க டாலருக்கு மலேஷியா ரிங்கிட் 5 ஆக இருக்கும் .