பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமனா கட்சி ஷாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றமே சிறந்த இடம் என்கிறது.
ஷாரியா நீதிமன்றங்களை வலுப்படுத்தும் முயற்சிகளை அமனா ஆதரிப்பதாக அக்கட்சி துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பாஸ் சட்டம் 355-க்கு ஆதரவாக பேரணி நடத்தப் போவதாக அறிவித்த இரண்டாவது நாளில் அவர் இவ்வாறு கூறினார்.
சட்டம் 355 ஆதரவு- பேரணி பிப்ரவரி 18-இல் நடத்தப்படும் என்றும் அதை டட்டாரான் மெர்டேகாவில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் பாஸ் கட்சி தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் அறிவித்திருந்தார்.
இதனிடையே, கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் மெர்டேகா சதுக்கத்தில் பேரணி நடத்தப்படுவதை விரும்பவில்லை. பேரணியை ஸ்டேடியம் டிட்டிவங்சாவில் நடத்துமாறு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.