இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெக்குன் நேசனல் கடனுதவிக் கழகத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிர்வாக இயக்குனருமான அப்துல் ரகிம் ஹசான், அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
அந்த 62வயது நபர் 2015, ஜனவரி 13-இல், பாசடானா நிறுவனத்துக்கு ரிம 360,009. 08 தொகையைத் துரிதமாகப் பெற்றுத் தர 36,000 ரிங்கிட்டைக் கையூட்டாகக் கேட்டார் என்பது அவர்மீதான முதல் குற்றச்சாட்டு.
அதே ஆண்டு ஜனவரி 15-இல் கையூட்டுத் தொகையான ரிம36,000-த்தை அவர் கிளாப் ஷா ஆலம் வளாகத்தில் பெற்றுக்கொண்டார் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு.
செஷன்ஸ் நீதிபதி அஸ்மாடி உசேன், ரிம18,000 ரொக்கத்துடன் ஒரு நபர் பிணையில் அவரை விடுவித்தார்.
அவர்மீதான வழக்கு இவ்வாண்டு மார்ச் 13-இல் விசாரணைக்கு வருகிறது.