“நீதிபதிகளை ஏற்பாடு செய்தல்” என்ற அன்வார் பற்றிய செய்தி அடிப்படையற்றது, என்எஸ்டி ஒப்புக்கொள்கிறது

 

NST storyபிகேஆர் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம் நாணையமற்றவர் என்பதுடன் பணச் சலவைச் செய்யும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று 2013 இல் தாம் வெளியிட்ட கட்டுரைகளுக்காக வழக்குரைஞர் ரஞிட் சிங் மகிண்டர் சிங் அன்வாரிடம் மன்னிப்பு கோரினார். அக்கட்டுரைகளை வெளியிட்ட நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் அவை அடிப்படையற்றவை என்று ஒப்புக் கொண்டது.

நீதிபதிகளை ஏற்பாடு செய்வதற்காக அன்வாரிடமிருந்து காலஞ்சென்ற கர்பால் சிங் ரிம50 மில்லியன் பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்டதற்காக ரஞ்சிட் சிங் அவரிடமும் மன்னிப்புக் கோரினார்.

நீதிமன்றத்தில் தமது மன்னிப்பு கோரல் கடிதத்தை வாசித்த ரஞ்சிட் சிங் தமது அறிக்கைகளுக்காக எவ்வித ஐயப்பாடும் தயக்கமுமின்றி மன்னிப்பு கோருவதாகக் கூறினார்.

ரஞ்சிட் சிங் குறிப்பிட்ட அறிக்கை என்எஸ்டியின் 10 ஆவது பக்கத்தில் ஆகஸ்ட் 6, 2013 இல் “உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை நிருபியுங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

என்எஸ்டி செலவுத் தொகையாக ரிம60,000.00 அன்வாருக்கு கொடுக்க வேண்டும்.

மேலும், என்எஸ்டி அதன் மன்னிப்பை நாளை வெளியிடும்.