சாயம் ‘ஸ்ப்ரே’ செய்யப்போவதாக மிரட்டியுள்ள கும்பலுக்கு எதிராக விழிப்புநிலையில் பத்துமலை நிர்வாகம்

thaipusamபத்துமலை   ஆலய    நிர்வாகம்,    தைப்பூச  விழாவின்போது    பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் மீது   சாயத்தை    ஸ்ப்ரே   செய்யப்போவதாக  மிரட்டியுள்ள   கும்பலுக்கு  எதிராக    விழிப்புடன்    இருக்கும்.

“முகநூலிலோ     அல்லது   வேறு   எந்தத்   தளத்திலுமோ   எந்தத்    தரப்பும்    மிரட்டுவதை     அதுவும்    பெண்கள்   இப்படித்தான்   உடை   அணிய    வேண்டும்    என்றும்   மிரட்டுவதை    அனுமதிக்க   முடியாது”,  என   ஸ்ரீமகா  மாரியம்மன்   தேவஸ்தானத்    தலைவர்   ஆர்.நடராஜா   கூறினார்.

“அப்படிப்பட்ட   மிரட்டலை   யாராவது   செயல்படுத்த   முனைந்தால்   அதிகாரிகளுக்குத்   தெரியப்படுத்துவோம்”,  என்றவர்   சொன்னதாக   த  சன்   அறிவித்துள்ளது.

ஆலயம்   வரும்   ஆண்களும்   பெண்களும்   பின்பற்ற  வேண்டிய     உடைநெறி   ஒன்று   உண்டு.

“பக்தர்கள்   அதைப்   பின்பற்ற  வேண்டும்   என்று   விரும்புகிறோம்..  ஆனால்,  அதைக்  கட்டாயப்படுத்த   மாட்டோம்.

“உடைநெறியை   மீறுவோரிடம்    இதமாகவும்    பதமாகவும்   எடுத்துரைப்போம்.

“விழா   அமைதியாக   நடந்தேற   வேண்டும்,  அதுதான்   எங்கள்  விருப்பம்”,  என்றார்.

இதனிடையே,   சிலாங்கூர்   போலீஸ்   தலைவர்    அபு   சாமா   மாட்,    சட்டத்தைக்  கையிலெடுத்துக்   கொள்வோர்மீது   போலீஸ்    நடவடிக்கை   எடுக்கும்   என்று   எச்சரித்துள்ளார்.