நேற்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள், மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் அலுவலகத்தில் அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தியதாக நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்று கூறியது.
நான்கு மணிநேரம் நீடித்த அந்நடவடிக்கையின்போது சிஎம்மும் விசாரிக்கப்பட்டாராம்.
ஊழல்தடுப்பு ஆணையம் அங்கிருந்து “பல பெட்டிகளில்” ஆவணங்களை அள்ளிச் சென்றது. எல்லாமே “சிஎம் அலுவலகத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும்” ஓர் அதிகாரிமீது நடந்து வரும் விசாரணை தொடர்பானவை என்று அது மேலும் கூறியது.
அந்த அரசாங்க அதிகாரியின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம் இருந்திருக்கிறது. எல்லாமே முடக்கி வைக்கப்பட்டுள்ளன.