வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையைவிட்டு ஓடாதிருக்க அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) வலியுறுத்தியுள்ளது.
அன்னிய தொழிலாளர்கள் ‘லெவி’யை அவர்களே செலுத்த வேண்டும் என்று மலேசிய கட்டிடக் குத்தகையாளர் சங்கம் நேற்று அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாக எம்டியுசி தலைமைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.
“முதலாளிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி சம்பளம் கொடுத்தால் அன்னிய தொழிலாளர்கள் ஓடிப் போக மாட்டார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அன்னிய தொழிலாளர்கள் எந்த வேலைக்கு என்று சொல்லி அழைத்து வரப்படுகிறார்களோ அந்த வேலை அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை, அதுதான் ஓடிப் போகிறார்கள் என்றார்.
வசதிக்குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இங்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதால் அவர்களை ‘லெவி’ கட்டச் சொல்வது நியாயமல்ல என்று கோபால் கூறினார்.
மனிதாபிமானம் இல்லாத முதலாளிகளும் சமூக சமத்துவம் இல்லாத அரசும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யாது– சப்பிகளுக்கு தான் லாபம்.