சட்டம் 355 குறித்து அச்சம் தேவையில்லை- பாஸ்

pasசட்டம்  355 -ஆதரவுப்   பேரணியில்    விரும்பத்தகாத     சம்பவம்    எதுவும்   நடக்காது    என்று    பாஸ்   உத்தரவாதமளிக்கிறது.    அது   நபிகள்    நாயகத்தின்   பிறந்த    நாளைக்    கொண்டாடுவதற்காக    ஆண்டுதோறும்     நடைபெறும்    ஊர்வலம்     போன்றதுதான்.

எனவே,  பிப்ரவரி   18-இல்  அப்பேரணியை    டட்டாரான்   மெர்டேகாவில்     நடத்துவதற்கு    கோலாலும்பூர்   மாநகராட்சி   மன்றம்    அனுமதி   அளிக்க   வேண்டும்   என்று   பாஸ்    உதவித்    தலைவர்    இஸ்கண்டர்   சமட்    கேட்டுக்கொண்டார்.

“பேரணியை   எண்ணி   முஸ்லிம்- அல்லாதார்   அஞ்ச  வேண்டியதில்லை.   ஏனென்றால்,   அச்சட்டத்துக்குக்   கொண்டுவரப்படும்   திருத்தங்கள்   முஸ்லிம்- அல்லாதாரைப்   பாதிக்க    மாட்டா”,  என்றவர்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

பேரணி   தேசிய   நல்லெண்ணத்தைக்   கெடுக்கும்   என்று   கூறி   மசீச     அதற்கு   எதிர்ப்பு     தெரிவித்ததை     அடுத்து    பாஸின்    அந்த   அறிக்கை  வெளிவந்தது.

இதனிடையே,   பாஸ்     தகவல்   தலைவர்     நஸ்ருடின்   ஹசான்,   பேரணி    நல்லிணக்கத்துக்குக்   கேடாக    அமையாது    என்றார்.  அதில்    பிரார்த்தனைகளும்    சமய   உரைகளும்    மட்டுமே     இடம்பெறும்    என்றார்.

“மசீச   அஞ்ச   வேண்டியதில்லை.  அது   ஓர்   அமைதி  ஒன்றுகூடல்    என்பதால்   அதை   எவரும்   எதிர்க்கக்   கூடாது.

“தெரு   ஊர்வலங்கள்   கிடையாது.  தேசிய   நல்லிணக்கத்தைக்   கெடுக்கும்    நடவடிக்கைகள்    அதில்   இல்லை”,  என்றவர்   சொன்னார்.