குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி, அத்துறையில் ஊழலில் ஈடுபடுவோர் இன்னும் உண்டு என்று கூறினார்.
பணியாளர்கள் அனைவரும் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நேற்றிரவுகூட ஒரு சம்பவத்தில் சில அதிகாரிகள் “வேறு விதமாக நடந்து கொண்டார்கள்” என்றார்.
“வெளியே சில “சூத்திரதாரிகளும்” உள்ளே துரோகிகளும் இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
“ஊழலையும் தவறுகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இங்கு வலியுறுத்துகிறேன்”, என முஸ்டபார் புத்ரா ஜெயாவில் குடிநுழைவுத் துறையின் முதலாவது மாதாந்திர ஒன்றுகூடலின்போது தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒழுங்குவிதிகளை மீறிய 32 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் துணை தலைமை ஆணையராக இருந்த முஸ்டபார் கடந்த ஆண்டில் குடிநுழைவுத் துறை தலைவராக பொறுப்பேற்றார்.
ஹாஹாஹா -இது தான் எனக்கு 1983 லேயே தெரியும்– தெரிந்தும் என்ன செய்ய முடியும்? ஒரு வெங்காயமும் முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை ஊழல்கள்? என்ன நடந்தது? எல்லாமே பாய்க்கு அடியிலேயே கூட்டி வைத்தாகி விட்டது தானே மிச்சம். எல்லாவற்றிற்கும் தலை தான் முக்கியம்.
எல்லாமே திறந்த ரகசியம்.
அவர்கள் துரோகிகள் என்றால் அவர்கலை வேலைக்கு அமர்த்தியவர்களை என்ன சொல்ல? ஒரே இனம் அரசு வேலைகளை ஆக்கிரதமிப்பதால் வரும் வினைகள்..முன்பு எங்களவர்கள் அரசுப் பதவிகளில் இருந்த போது இது மாதிரி நடந்த ஊழல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இப்போது கை விரல்கள்.கால் விரல்கள். அக்கம் பக்கத்தோரின் கை விரல்கள் கால் விரல்கள் போதவில்லை…..யே….
உண்மை விளம்பி !
குடிநுழைவுத்துறையில் பணி புரியும் மலாய்க்காரர்களுக்கு மற்ற மொழிகளை (சீனம், தமிழ் மற்றும் இதர மொழிகள் ) பயில அரசாங்கம் வருடத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கிறது.
சீனம், தமிழ் மற்றும் இதர மொழிகள் பயின்ற மலாய்க்காரர்கள் இந்த மொழிகள் பயின்றவுடன் அவர்களுக்கு உடனே மலேசிய வெளிநாட்டு தூதரகத்தில் பணி புரிய வாய்ப்பு வழங்கபடுகிறது. மலேசிய வெளிநாட்டு தூதரகத்தில் பணி புரிந்து நாடு திரும்பியவுடன் குடிநுழைவு துறையில் பதவி உயர்வும் பெறுகிறார்கள். அதே சமயம் தொடக்க பள்ளியில் சீனம், தமிழ் பயின்ற மலாய்க்காரர்களுக்கு குடிநுழைவு துறை பணிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால் நன்கு படித்த சரளமாக சீனம், தமிழ் பேசும் சீனருக்கோ அல்லது தமிழருக்கோ வாய்ப்புகள் தரப்படுவதில்லை.
ஐயா ஸ்ரீகர முதல்வன் அவர்களே – இதில் என்ன ஆச்சரியம்? நம்மை ஓரங்கட்டவே ஆங்கில பள்ளிகள் எல்லாம் தேசிய பள்ளிகள் ஆக்கப்பட்டன. மலாய்க்காரர் அல்லாதார் அவன்களை விட நன்றாக தேறி யும் என்ன பயன்?
எல்லாம் அவன்களுக்கே கொடுக்கப்பட்டது. கேட்க நாதி இல்லை– MIC MCA நக்கிகளுக்கு எலும்பு துண்டு தான் முக்கியம் – இன்றைய நிலை என்ன? 100 % வேலைகள் எல்லாம் அவன்களுக்கே கொடுக்கப்படுகிறது- ஆனால் ஆச்சரியமாக jb குடிநுழைவு இடத்தில் நம்மவர் சிலரையும் சபா சரவாக் மக்களையும் கண்டேன்.நாம் என்னதான் அவன்களை விட தகுதியும் திறனும் இருந்தாலும் அரை வேக்காடு நாதாரிகள் நமக்கு மேலே உட்கார்ந்து நாற அடித்து விடுவான்கள்– எல்லா துறையும் இப்படித்தான் இருக்கிறது–