பினாங்கில் பிறந்தவரான லோ தெக் லோ அல்லது ஜோ லோ, நாடு திரும்பி 1எம்டிபியில் அவரது பங்கு என்னவென்பதை விளக்கிட வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
1எம்டிபி விவகாரத்தால் மலேசியாவின் பெயர் கெட்டுப் போயுள்ளது. அதிகாரிகள் ஜோ லோ-வின் கடப்பிதழை இரத்துச் செய்ய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“1எம்டிபி குறித்து விளக்கமளிக்க அவர் நாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
“நஜிப்மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியவில்லை, ஜோ லோ மீதாவது நடவடிக்கை எடுப்போம்”, என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.
கடந்த ஆண்டு அமெரிக்க நீதித் துறை பணச்சலவை நடவடிக்கைகள் தொடர்பில் தொடுத்த வழக்கில் ஜோ லோ, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரேஸா அசிஸ் ஆகியோரும் எதிர்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பினாங்கு ஆயர் ஈத்தாமில் 1எம்டிபிக்குச் சொந்தமான 234 ஏக்கர் நிலத்தை மாநில அரசு தொடர்ந்து முடக்கி வைத்திருக்கும் என்றும் லிம் தெரிவித்தார்.
“1எம்டிபி ஊழல்மீது முழு விசாரணை முடிந்து அறிக்கை வெளிவரும் வரையில்” அந்நிலம்மீது எவ்வித பரிவர்த்தனையும் நடப்பதை மாநில அரசு தடுக்கும் என்றாரவர்.
அதெல்லாம் நடக்காது. திருடனுக்கெல்லாம் இப்போது எப்படி தைரியமாக நடமாட முடியும் என்று தெரியும்.ஒன்றும் புடுங்கமுடியாது