பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை எங்கே நடத்துவது என்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசுவதற்கு பாஸ் கட்சி ஒரு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.
“நாங்கள் முதலில் கூடுவோம். மிகக் குறுகிய காலத்தில் கூடுவோம். பெப்ரவரி 18 இல் டாத்தாரான் மெர்தேக்காவில் கூட்டம் நடத்துவதர்கான எங்களுடைய மனுவுக்கான டிபிகேஎல்லின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கு நான் பாஸ் பேரணியை தித்திவங்சா அரங்கத்தில் நடத்தும்படி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு “முடிந்தால், டாத்தாரான் (மெர்தேக்காவில்) நடத்த விரும்புகிறோம்” என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்.
டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையிலேயே சாத்தியமில்லை என்றால், அதன் பிறகு வேறு இடம் பார்ப்போம் என்று துவான் இப்ராகிம் மேலும் கூறினார்.
இங்கு என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது? மக்கள் ஆட்சி என்றால் அரங்கு முன் உபயோகத்திற்கு ஒதுக்கப்பட வில்லை என்றால் யாருக்கும் உபயோகப்படுத்த விட வேண்டும். ஆனால் இங்கு ஆட்சியில் இருப்பவர்களின் காழ்புணர்ச்சியில் குறை கூறுபவர்களை எதிரிகளாக்கி அவர்களை பழிவாங்கும் நிலைதான் இன்று. PAS -கேட்கவே குமட்டுகிறது ஆனாலும் ஜன நாயகத்தில் நாம் சமமாக நடத்த வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்– இந்த pas நாதாரிகள் ஆட்சியில் இருந்தால் நாம் புலம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த நாதாரிகள் மற்றவர்களிடம் மனித உரிமை பற்றி குரல் எழுப்புவார்கள் ஆனால் இவர்களின் ஆட்சியில் அதை நாம் எதிர் பார்க்க முடியாது. பெரும்பாலான நாடுகள் இதைப்பற்றி மௌனம் காப்பது எனக்கு புரிவில்லை– இவர்கள் எங்கு வேண்டுமானாலும் இவன்களின் உரிமைக்காக போராடுவான்கள்- ஆனால் மற்றவர்களின் உரிமையை பற்றி அக்கறை கிடையாது. இந்தியா போன்ற நாடுகள் மிகவும் அதிகமாகவே வளைந்து கொடுத்து எல்லாவற்றையும் நாற அடித்து விட்டது.