ஜோகூர் சுல்தான்: மகாதிர் அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார்

 

johoresultanMமாநிலம் (ஜோகூர்) அதன் நிலத்தை சீனர்களிடம் அடமானம் வைத்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறியிருந்ததற்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அவரை அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார் என்று சாடினார்.

த ஸ்டார் நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் மகாதிர் கூறிய கருத்துகளால் தாம் கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுல்தான் கூறினார்.

“போதும், போதும். டாக்டர் மகாதிர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் போரஸ்ட் சிட்டி பற்றி கிளப்பிவிட்ட சர்ச்சைகள் குறித்து தாம் இதுவரையில் எக்கருத்தும் கூறாமல் என்னைக் கட்டுப்படித்திக் கொண்டுள்ளேன்.

“ஆனால், டாக்டர் மகாதிர் இப்பிரச்சனை பற்றி அவரின் திரித்துக்கூறலால் அளவுக்கு மீறிச் சென்றுவிட்டார். அவர் 700,000 சீன நாட்டு குடிமக்கள் ஜேபியில் தங்குவார்கள் என்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் பொருமளவிலான நிலங்கள் சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

“ஜோகூர் சீனர்களிடம் நிலத்தை அடைமானம் வைத்துவிட்டது, நாம் நமது இறையாண்மையை விட்டுக்கொடுத்து விட்டோம் என்ற தோற்றத்தை அவர் அளிக்கிறார், அதற்கு நாம் எப்படி சிங்கப்பூரை பிரிட்டீஷாருக்கு கொடுத்து விட்டோம் என்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார்”, என்று சுல்தான் இஸ்தானா புக்கிட் செரினில் அளித்த நேர்காணலில் கூறியதாக த ஸ்டார் அறிக்கை கூறுகிறது..