ஐயா, குற்றங்களை எதிர்த்துப் போராட சீனா பின்பற்றும் முறைகளைப் புகழ்ந்துரைக்கிறீர்களே அப்படிப் புகழ்ந்துரைக்க ஒரு ஜனநாயக நாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா என்று எதிரணி எம்பி ஒருவர் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை நோக்கி வினவுகிறார்.
“நாம் பிரமிப்பதற்கோ கற்றுக்கொள்ளவோ சீனா ஒரு முன்மாதிரி நாடல்ல.
“அது சட்ட ஆளுமையைப் பின்பற்றாத, மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழும் ஒரு நாடு”, என பாடாங் செறாய் எம்பி என்..சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“சீனாவின் விழுமியங்களும் ஆட்சிமுறைகளும் ஒரு சுயமரியாதையுள்ள ஜனநாயக நாட்டுக்கு நேர் எதிரானவை.
“அது ஒரு-கட்சி நாடு. ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில்லை, தேர்தல்களையும் நடத்துவதில்லை”, என்றாரவர்.
சீனா போன்ற அடக்குமுறையினால் தான் வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் உட்கார்ந்து சொகுசு வாழக்கை நடத்தலாம். அதை நோக்கித்தான் இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது. மிக விரைவில் அது நடக்கும்– இப்போதே 60 % சாதிச்சாச்சி — வெறும் 40 % மீதம்.
வாய்க்கு வந்ததெல்லாம் வல்லமை . யாரை புகழ வேண்டும் என்று கூட அது இல்லை .