ஷெல் பெட்ரோல் நிலையங்கள் பல தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்நோக்கி வருகின்றன. அதன் விளைவாக பல நிலையங்களில் ஊர்திகளுக்கு எண்ணெய் நிரப்ப முடியவில்லை.
ஆனால், அதன் காரணமாக நாட்டில் உள்ள எல்லா ஷெல் நிலையங்களும் மூடப்பட்டு விட்டதாக கூறும் ஊடகச் செய்தியை ஷெல் மலேசியா பேச்சாளர் ஈவோன் சங் மறுத்தார்.
“சில நிலையங்களில் இணைய இணைப்பு இல்லை(அதனால் எண்ணெய் நிரப்ப முடிவதில்லை) . சிலவற்றில் ரொக்கம் கொடுத்து எண்ணெய் நிரப்பிக் கொள்ளலாம். எல்லா நிலையங்களும் மூடப்பட்டதாகக் கூறுவது உண்மையல்ல”, என்றார்.
“பிரச்னை இப்போது சரிசெய்யப்பட்டு வருகிறது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.