பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அரசு அதிகாரிகள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டுமாய் எச்சரித்துள்ளார்.
அனுபவம் அவரை அப்படிப் பேச வைத்துள்ளது.
“லாஸ் வேகாஸ் சென்றிருந்தேன். லாஸ் வேகாஸில் நிறைய சூதாட்ட இயந்திரங்கள் இருப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.
“அதைப் படமெடுத்தேன். அதைக் கண்ட மக்கள் நான் சூதாட்ட மையத்துக்குச் சென்றேன் என்று கதைகூறத் தொடங்கி விட்டார்கள்.
“சூதாடுவதாக இருந்தால் நானே படமெடுத்து அதைப் பதிவிடுவேனா? அது முட்டாள்தனமல்லவா”, என்று அஸலினா இன்று புத்ரா ஜெயாவில் சட்டப் பிரிவின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வில் கூறினார்.
எனவே, அரசு அதிகாரிகள் யாரும் தங்களைக் கண்காணிக்கவில்லை என்று நினைக்கக் கூடாது. இன்ஸ்டாகிராமில் போட்ட படங்களை வைத்துக்கூட கதை கட்டி விடுவார்கள் என்றவர் எச்சரித்தார்.
இவளுக்கு யார் உண்மை சொன்னாலும் ஒவ்வாது– இந்த ஈனங்களே ஆட்சியிலும் அதிகாரத்தில் எப்போதுமே இருக்கவேண்டும். அதற்காக பொய்யும் பித்தலாட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது.