கோலாலும்பூர் மையப்பகுதியில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சிறுரக மோட்டார் சைக்கிள்களை தடைசெய்யும் கருத்தை இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் ஏற்கவில்லை.
“அவற்றால்(மோட்டார் சைக்கிள்கள்) ஏற்படும் தூய்மைக்கேடு சிறிதுதான். பெரிய ஊர்திகள்தாம் தூய்மைக்கேட்டுக்குக் காரணம்.
“சிறிய வாகனங்களைத் தடை செய்ய வேண்டுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பெரிய லாரிகளைத் தடை செய்ய வேண்டும்”, என வான் ஜுனாய்டி கூறினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் துங்கு அட்னான் துங்கு மன்சூர் நகர மையப் பகுதிகளில் ‘கப்சாய்’களைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாக வான் ஜுனாய்டி இவ்வாறு கூறினார்.
இவ்விவகாரத்தில் ஒரு முடிவெடுப்பதற்குமுன் அறிவியல் ஆய்வு ஒன்று தேவை என்றும் அவர் சொன்னார்
ஆமாம் நீங்க முதலில் பரிசோதனை செய்ய வேண்டியது தலைநகரில் ஓடும் பேருந்துகளைதான் அதிலிருந்து வரும் கரிய புகைகள் அதிகமாக இருக்கிறது.சில பேருந்துகள் மிகவும் மோசமாகவே பயன் பாட்டில் உள்ளது.
சிறிய ரக மோத்தார் சைக்கிள்களை தடை செய்ய வேண்டும் எனும் பரிந்துரை மு______ தனமானது. மோட்டார் சைக்கிள்ககளால் தலைநகரின் எந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகின்றது அல்லது தூய்மைக்கேடு ஏற்படுகின்றது? எங்களுக்கும் ஆசைதான் பி.எம்.டபிள்யு, பென்ஸ் ரக கார்களில் தலைநகர் வர எங்களுக்கும் ஆசைதான். எனவே சிறிய ரக மோட்டார் சிக்கிளோட்டிகளுக்கு இலவச கார்களை வழங்குங்கள். அ______ர் வெட்டிகளுக்கு பதவி கொடுத்தால் இது போல கருத்துக்கள் நிறையவே வரும்.
அறிவாளிகளின் சிந்தனையில் உதிர்ந்த திட்ட்ங்கள். அண்டை நாடு சிங்கப்பூரை கவனியுங்கள். பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது.அது போன்று இங்கு இல்லை . அதனால் சொந்த வாகனம் பயன்பாடு இந்த நாட்டில் அவசியம் தேவை.