பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்ட(பிரிமா)த்தின்கீழ் மேலும் பலர் வீடு வாங்குவதற்கு வழிகோலும் இரண்டு கொள்கை மாற்றங்களை இன்று அறிவித்தார்.
ஒன்று, பிரிமா வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்குவோருக்கான வருமான வரம்பு ரிம10 ஆயிரத்திலிருந்து ரிம15 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, பிரிமா வீடுகளை வாங்குவோர் 10 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடவோ விற்கவோ கூடாது என்ற கட்டுப்பாடும் 5 ஆண்டாக தளர்த்தப்பட்டிருக்கிறது.
“வருமான வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது மேலும் பலர் பிரிமா வீடுகள் வாங்குவதற்கு வாய்ப்பாக அமையும், அத்துடன் வாடகைக்கு அல்லது விற்பதற்கான காலக்கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது”, என்று நஜிப் கூறினார்.
























