முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவிக்கும் பல கருத்துகள் காலவதியானவை, இக்காலத்துக்குப் பயனற்றவை என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாடியுள்ளார்.
மகாதிர் இக்காலத்தில் எப்படி செயலாற்றப்படுகிறது, உலக மயம் என்றால் என்ன என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
“இது எல்லைகளற்ற உலகம். மகாதிர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்”, என சாலே தம் வலைப்பதிவில் கூறினார்.
த ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், ஜோகூரில் சீனாவின் முதலீடுகள் குறித்து மகாதிர் கருத்துத் தெரிவித்திருந்ததற்கு எதிர்வினையாக சாலே இவ்வாறு கூறினார்.
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிமின் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் மகாதிரின் வாதம் ஒரு ‘கோணல் வாதம்’ என்று சாலே வருணித்தார். அவருடைய வாதத்தை வைத்தே அவரை மடக்க முடியும் என்றார்.
“மகாதிர் தம் வாதத்துக்கு வலுச்சேர்க்க வெளிநாட்டுச் செய்தி அறிக்கைகளை ஆதாரங்களாகக் காண்பிக்க முற்படுகிறார். அந்த அறிக்கைகள் இதுவரை மறுக்கப்படவில்லை என்பதால் அவை கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம்.
“ஆனால், வெளிநாட்டுச் செய்திகள் கூறுவதெல்லாம் உண்மை அல்ல என்று கூறியவரும் இதே மகாதிர்தான்”, என்றாரவர்.