2014 யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்த பள்ளி ஆசிரியரை கோலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.
கே. அன்பரசு,52, குற்றம் செய்தார் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிபதி நிரான் டான் கிரான் தீர்ப்பளித்தார்.
பெங்களான் உலு, கெரு தேசிய வகை தமிழப்பள்ளியின் மூத்த நிர்வாக உதவியாளரான அன்பரசு மீது கணிதம் 035/1, கணிதம் 035/2 ஆகிய தேர்வுத் தாள்களை அவரது கைப்பேசியில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அறிவியல் 018 தேர்வுத் தாளையும் வைத்திருந்ததாக இன்னொரு குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது.
அன்பரசை விடுவித்த நீதிபதி, கைப்பேசி உள்பட அவரது உடமைகளை அவரிடமே ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.