கிள்ளான் ஷியாரியா நீதிமன்றம் தகுந்த தகுதிச் சான்றுகள் இன்றிச் சமயக் கல்வி புகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அமனா எம்பி காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம் விதித்ததை அடுத்து அவர் தம் எம்பி பதவியை இழக்கும் அபாயமும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
காலிட் குற்றவாளி என்று கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டு இன்று அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர் மூன்று மாதம் சிறை செல்ல வேண்டியிருக்கும்.
கூட்டரசு அரசமைப்பு சட்டவிதி 48(1)-இன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஓராண்டுக்குமேல் சிறைத்தண்டனை அல்லது ரிம2,000-த்துக்குமேல் அபராதம் விதிக்கப்பட்டால் அவர் எம்பி பதவியை இழப்பார்.