சீனாவிடம் உள்நாட்டுக் குத்தகைகள் கொடுக்கப்படுவதுமீது சர்ச்சைகள் தொடர்கின்றன. இப்போது பேராக்கில் வீடமைப்புத் திட்டமொன்று சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பார்டி அமனா நெகரா (அமனா), ஈப்போ, மேரு ராயாவில் ‘D’Aman Residensi’ கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் கட்டித்தர ஜனவரி 16-இல் சீனாவின் ஹுவாஷி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
“குறிப்பிட்ட திட்டத்தை உள்நாட்டு மேம்பாட்டாளர்களே கட்டித்தர முடியும் என்கிறபோது அதை வெளிநாட்டு நிறுவனத்துக்குக் கொடுத்தது என்ன நியாயம் என்று கேட்கிறோம்.
“கட்டுப்படி விலை வீடுகளைக் கட்டுவது வெளிநாட்டு நிறுவனத்தைத் தேடிச் செல்லும் அளவுக்குத் தனித்திறன்கள் தேவைப்படும் திட்டம் அல்லவே”, என பேரா அமனா இளைஞர் தலைவர் ஹஸ்னுல் சுல்கர்னைன் ஓர் அறிக்கையில் கூறினார்.
இதுபோன்ற கோளாறுகள் செய்யத்தான் மக்கள் BN அரசுக்கு வாக்கு அளித்தார்கள் !
இது கூட தெரியாதா? மேசைக்கு அடியில் நடப்பது தெரியாதா என்ன?