குவான் எங்: டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கோரியதே இல்லை

 

DAPnotforDPMஎதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் துணைப் பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று டிஎபி கோரியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார்.

அந்தாராபோஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் டிஎபி துணைப் பிரதமர் பதவியை கேட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு யாயாசான் பெர்டானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஎபி பிரதமர் பதவியை கேட்டதே இல்லை என்று மகாதிர் கூறியதாக அவரை மேற்கோள்காட்டி அந்தாராபோஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற பேச்சுகள் நடந்ததே இல்லை என்று கூறுகிறார் லிம்.

“அரசாங்கத்தில் பதவிகள் பற்றி பேசியதே இல்லை”, என்று குவான் எங் இன்று பின்னேரத்தில் பினாங்கில் ஒரு செய்தியாலர் கூட்டத்தில் கூறினார்.

டிஎபி ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. பக்காத்தான் ஹரப்பன் இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.

டிஎபி எதிர்வரும் பொதுத் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடக்கூடும். அது துணைப் பிரதமர் பதவியைக் கோரியதே இல்லை என்று திட்டவட்டமாக லிம் கூறினார்.

இது மலாய்க்காரர்களை நடுங்க வைப்பதற்காக அம்னோ விளையாடும் விளையாட்டு என்றார் லிம்.