மலேசியா காணாமல்போன எம்எச்370 பற்றிய முக்கியமான தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமும் தனிப்பட்ட விமானப் போக்குவரத்து நிபுணர்களிடமும் கொடுக்காமல் வைத்துக்கொண்டது. அத்தகவல் கிடைத்திருந்தால் விமானத்தைக் கண்டுபிடித்திருக்க முடியுமாம்.
இவ்வாறு ஆஸ்திரேலிய இணையச் செய்தித்தளம் நியுஸ். காம். ஏயு ஒரு கட்டுரையில் கூறியுள்ளது.
“வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்ற பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடிக்க உதவக்கூடிய எல்லாத் தகவல்களும் கொடுக்கப்பட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு.
“காணாமல்போன போயிங் 777 இருக்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடிக்கத் தேவையான முக்கியமான ரேடார் தகவல்களை மலேசியா ஆஸ்திரேலிய போக்குவரத்து அதிகாரிகளிடமும் நிபுணர்களிடமும் கொடுக்கவில்லை, இன்னும்கூட கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நியுஸ்.காம். ஏயு தெரிவித்துக் கொள்கிறது”, என அக்கட்டுரை கூறிற்று.
எம்எச்370 விழுந்த இடத்தைத் துல்லியமாகக் கணிப்பதற்கு உதவக்கூடிய தகவல்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என தனிப்பட்ட முறையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிபுணர் விக்டர் இயனெல்லோவும் பிரிட்டனின் டோன் தாம்சனும் கூறியிருப்பதை அது சுட்டிக்காட்டியது.
இவன்களின் சொதப்பலுக்கு அளவில்லை– எல்லாமே மலாய்க்காரன் மயம் ஆக்கியதன் விளைவு. ராடாரில் விமானத்தைப்பார்த்தும் ஒன்றும் செய்யாத விமானப்படை கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திறமையிலேயே புரியவேண்டுமே– எல்லாமே இவன்களின் கையில் இருக்கும் போது ஒருவருக்கும் ஏதும் சொல்ல தேவை இல்லை.