பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடிக்கடி தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் டாக்டர் மகாதிரை மீண்டும் சாடினார்.
இன்று காலை கோலாலும்பூரில் தேசா பாண்டானில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய நஜிப் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை மட்டம் தட்டிப் பேசினார்.
“டாக்டர் மகாதிரை யு-டர்ன் (பல்டி அடிக்கும்) மகாதிர் என்றுதான் சொல்வேன், துன் மகாதிர் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் அவர் அடிக்கடி பல்டி அடிக்கிறார்.
“நேற்று ஒரு செய்தியைப் பார்த்தேன். எதிரணி வெற்றி பெற்றால் டிஏபி-க்குத் துணைப் பிரதமர் பதவி கொடுக்கப்படும் என்றவர் சொல்லியிருக்கிறார்.
“சகோதர, சகோதரிகளே, கடந்த 22 ஆண்டுகளாக அவர் (டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கைக்) குறைகூறி வந்திருக்கிறார். கிட் சியாங் ஓர் இனவாதி, இஸ்லாத்துக்கு எதிரி, மலாய்க்காரர்களுக்கு எதிரி என்றெல்லாம் சொல்லி வந்தார். திடீரென்று கிட் சியாங்குக்குத் துணைப் பிரதமர் பதவி கொடுக்க விரும்புகிறார்”, என நஜிப் கூறினார்.