தருண ஒற்றுமை மட்டும் போதாது- நஜிப்

Tnajib6பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   “தருண   ஒற்றுமை”   மட்டும்   போதாது     என்பதை   மலேசியர்களுக்கு  நினைவுறுத்தி    ஒற்றுமை   அவர்களின்   கலாச்சாரமாக   மாற   வேண்டும்    என்றார்.

இன்று  கோலாலும்பூரில்,    தேசிய  ஒற்றுமை   மற்றும்    ஒருமைப்பாட்டுத்  துறை   ஏற்பாடு    செய்திருந்த  “ஒற்றுமை   தருணங்கள்”   நிகழ்வில்  கலந்துகொண்டு   பேசியபோது    நஜிப்    மேற்கண்டவாறு    கூறினார்.

“அதை (ஒற்றுமையை)  நாம்   நம்முடைய   கலாச்சாரமாக     ஆக்கிக்  கொள்ள   வேண்டும்.

“இன்றைய    நிகழ்வின்   கருப்பொருள்  ‘ஒற்றுமை   தருணங்கள்’.  ஆனால்,  உண்மை   என்ன வென்றால்   சில   தருணங்களில்   மட்டும்   ஒற்றுமையாக  இருப்பது   நமக்கு   வேண்டாம்.   எப்போதும்    ஒற்றுமை   அதுதான்   நமக்குத்   தேவை”,  என்றார்.

மலேசியா   பல  கலாச்சாரங்களைக்  கொண்ட   நாடு   என்பதைச்   சுட்டிக்காட்டிய    நஜிப்,   ஒற்றுமை   வெறும்  சொல்லாக,   சிந்தனையாக    இருந்தால்    மட்டும்   போதாது    செயலாகவும்    மாற    வேண்டும்     என்றார்.