பிரிட்டனின் கடும் மோசடி அலுவலகம் (SFO)விமான ஜெட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் பிரிட்டீஷ் நிறுவனமான ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்குகளில் பல அந்நிய தரப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவற்றில் ஏர்ஏசியா குருப்பும் ஒன்று என்று பெயர் குறிப்பிட்டுள்ளது.
நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர், ரோல்ஸ் ரோய்ஸ்சின் இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, ரஷ்யா, சீனா மற்று மலேசியா ஆகிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில் ஒன்று ஏர்ஏசியாவுக்கு எதிரான இலஞ்சஊழல் குற்றச்சாட்டு.
ஏர்ஏசியாவுடனான தொழில் ஒப்பந்தத்தில் ரோல்ஸ் ரோஸ்க்கு ஏற்பட்ட இழப்பு 17.08 மில்லியன் பிரிட்டீஷ் பவுண்ட் ஆகும் (ரிம94.03 மில்லியன்).
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய ஏர்ஏசியா குருப், ரோல்ஸ் ரோய்ஸ்வுடனான அதன் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஏர்ஏசியா செயல்முறையயைப் பின்பற்றி வந்துள்ளது என்று அது மலேசியாகினியிடம் கூறியது.
இவ்வுலக பொருளாதாரம் லஞ்சத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது– இல்லாவிடில் நிறுவனங்கள் கதவை அடைக்க வேண்டும். ஒரு காலத்தில் நியாயம் நீதி ஒழுங்கு என்று இருந்தது ஆனால் இப்போது எதற்கு எடுத்தாலும் எனக்கு அதில் என்ன இருக்கிறது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் எல்லாமே நடக்கிறது. சுய நலம் பேராசை வறட்டு கெளரவம் அகங்காரம் உண்மைக்கு மதிப்பு இன்மை இப்படி எல்லாம் இருக்கும் போது லஞ்சம் தான் ராஜா.. பெரும்பாலும் மூன்றாம் உலக பொருளாதாரம் குறைந்தது 95 % ஊழலில்தான் நடக்கிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் எல்லாமே ஊழல்தான். நம் நம்பிக்கை நாயகன் காக்காத்திமிரையும் மிஞ்சி கொடிகட்டிப்பறக்கிறான் ஊழலில். ஸ்விட்ஸர்லாந்தில் இப்போது நடை பெரும் உலக பொருளாதா மாநாட்டில் நம் அரசியல் கேலிச்சித்திரர் ஸுனாரின் நம்பிக்கை நாயகன் ஊழல் கேலிச்சித்திரம் உலகுக்கே படம் போட்டு காண்பிக்கப்பட்டு இருக்கிறது- இதெல்லாம் மலேசியாவுக்கு அவமானம் கிடையாது.-மாபெரும் பெருமை. என்ன செய்வது மலேசியர்களுக்கு அவ்வளவு அறியாமை./அக்கறை இன்மை.