பாஸ், சட்டம் 555 குறித்து விவாதிக்க கத்தோலிக்க, என்ஜிஓ பேராளர்களைச் சந்தித்தது

pasநேற்று    பினாங்கில்,     பாஸ்     தலைவர்களும்     கத்தோலிக்கத்  தேவாலயத்தையும்   என்ஜிஓ-களையும்   சேர்ந்த   பேராளர்களும்   ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்டம்  1965-க்கு   முன்மொழியப்பட்டுள்ள    திருத்தங்கள்   குறித்து   விவாதிப்பதற்கு   ஒரு   கூட்டம்   ஏற்பாடு   செய்யப்பட்டிருந்தது.

அதில்,   பாஸ்   துணைத்    தலைவர்  துவான்   இப்ராகிம்   துவான்   மானும்   மற்ற   பாஸ்     தலைவர்களும்    கத்தோலிக்க    ஆயர்    செபாஸ்டியன்    பிரான்சிஸ்,   அலிரான்   மற்றும்   பினாங்கு   ஃபோரம்  பேராளர்   அனில்   நெட்டோ,  புனித   என்  தேவாலயத்தின்   பேராளர்கள்   ஆகியோரைச்   சந்தித்தனர்.

“அக்கூட்டத்தில்   பாஸ்   தலைவர்களும்   என்ஜிஓ   தோழர்களும்   கத்தோலிக்க   ஆலயப்  பேராளரகளும்   மனம்விட்டுக்    கருத்துப்  பரிமாற்றம்     செய்து   கொண்டார்கள்”, பாஸ்  கட்சியின்   அனைத்துச்  சமய   ஒருங்கிணைப்பாளர்    அப்துல்  ரஹ்மான்   காசிம்    தெரிவித்தார்.