பாஸ், அதனிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட அமனா கட்சி டிஏபியுடன் இணவது எதிரணி எதிர்நோக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று மொழிந்துள்ளது.
அமனாவின் இருப்பு தேசிய அரசியல் அரங்கைப் பிளவுபடுத்திக் கொண்டிருப்பதாக பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் சமட் கூறினார்.
“அது பிகேஆருடன் சேரக் கூடாது. டிஏபியுடன் இணைவதுதான் நல்லது. டிஏபியுடன்தான் அது மிக நெருக்கமாக இருப்பதுபோல் தெரிகிறது.
“அவ்வாறு நிகழுமானால் அமனா தலைவர்களுக்கு டிஏபியின் பாதுகாப்பான தொகுதிகளை வழங்கலாம். அதன்வழி பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும்”, என இஸ்கண்டர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.