டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தாம் பாஸுக்கு அமைதிக்கரம் நீட்டுவது ஒரு கபட நாடகம் என்று கூறப்படுவதை நிராகரித்தார்.
திருட்டுத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குத்தான் மலேசியா இப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் என லிம் கூறினார்,
“நான் கபடதாரியா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால், திருட்டுத்தனத்திலிருந்து விடுபடுவதே இப்போது நம்மை எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்னை.
“மலேசியாவைத் திருட்டுத்தனத்திலிருந்து பாதுகாப்பது தலையாய விவகாரம். அதில் இன, சமய வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்”, என லிம் இன்று பினாங்கில் கூறினார்.
நேற்று லிம், திருட்டுத்தனத்தை ஒழிக்கும் கடப்பாடு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்கும் இருக்குமானால் அவருடன் ஒத்துழைக்க தயார் என்று கூறி இருந்தார்.
இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் இது குறித்து டிஏபி மத்திய குழுவில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்பதையும் லிம் இன்று விளக்கினார்.