மனவெறுப்புகளை வெளிப்படுத்தும் நேரமல்ல இது: இஸ்கண்டருக்கு அமனா அறிவுறுத்து

amanahஅமனா    உதவித்   தலைவர்    முஜாஹிட்   யூசுப்    ராவா,    அமனா   கட்சி    டிஏபியுடன்  ஒன்றிணைவது   நல்லது   என்று   கூறிய     தம்  முன்னாள்   சகா   இஸ்கண்டர்   அப்துல்   சமட்டைக்  கடிந்து   கொண்டார்.

இஸ்கண்டரின்   பேச்சு  அடுத்த   பொதுத்   தேர்தலில்   பாஸ்   அமனாவுடன்   அல்லது  டிஏபியுடன்    உறவு  வைத்துக்கொள்ள   விரும்பவில்லை   ஆனால்   பார்டி  பிரிபூமி    பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)-வுடனும்   பிகேஆருடனும்   ஒத்துழைக்க  விரும்புகிறது    என்பதைக்   காண்பிக்கிறது   என  முஜாஹிட்   கூறினார்.

“வாக்காளர்கள்   எதிரணி   ஒன்றுபட்டிருப்பதைக்   காண   விரும்புகின்ற    வேளையில் துரதிர்ஷ்டவசமாக  இப்படி   ஓர்    அறிக்கை  வெளிவந்துள்ளது.

“சக   எதிர்க்கட்சிகளுக்கு    எதிராக    மனவெறுப்பைக்   கொட்டும்   நேரம்   இதுவல்ல.  இஸ்கண்டர்    உண்மையான    எதிரியை   அடையாளம்     கண்டு   நாட்டைப்   பாதுகாப்பதில்     கவனம்   செலுத்த   வேண்டும்”,  என   முஜாஹிட்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

பாஸ்   உதவித்    தலைவரான   இஸ்கண்டர்,    அமனா     டிஏபியுடன்   இணவது     எதிரணி    எதிர்நோக்கும்   பல   பிரச்னைகளுக்குத்   தீர்வாக   அமையும்    என்று   கூறியிருந்தார்.