ஐந்து மாநிலங்களில் 5,300க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்

floodsஜோகூரில்  பெருகிவரும்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை   1,457 ஆக   அதிகரித்துள்ளது.

நேற்று,  குளுவாங்,  கோத்தா   திங்கி,  ஜோகூர்   பாரு,   தங்காக்,  செகமார்    ஆகிய   மாவட்டங்களில்   19   துயர்த்துடைப்பு    மையங்கள்    திறக்கப்பட்டதாக     ஜோகூர்   வெள்ள   மேலாண்மைக்  குழுத்  தலைவர்   ஆயுப்  ரஹ்மாட்   கூறினார்.

“கோத்தா  திங்கியில்தான்   அதிகமானோர்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டனர்.  164  குடும்பங்களைச்   சேர்ந்த   838  பேர்”,  என்றாரவர்.

செகமாட்டில்   456  பேர்   துயர்த்துடைப்பு   மையங்களில்    தங்கியுள்ளனர்.

ஜோகூர்  பாருவில்  26    குடும்பங்களைச்      சேர்ந்த    83  பேர்   இரண்டு    துயர்த்துடைப்பு   மையங்களில்   தஞ்சம்   புகுந்துள்ளனர்.

குளுவாங்கில்,   34   பேர்  இரண்டு  மையங்களில்   தங்கியுள்ளனர்.  எண்மர்   தேவான்  கம்போங்   பாரிட்   ஹசானிலும்    26  பேர்   தேவான்   கம்போங்  தேவான்   ஆயரிலும்.

தங்காக்கில்,  மூன்று   மையங்களில்   43 பேர்   தங்கியுள்ளனர்.

இதனிடையே,  நேற்று  மாலை   பெய்த   கனத்த   மழையினால்,   ஷா   ஆலம்    அருகில்,   சாபாக்   பெர்ணத்தில்   வெள்ளம்   பெருகி      152  குடியிருப்பாளர்கள்   இரண்டு    துயர்த்துடைப்பு   மையங்களுக்கு    அப்புறப்படுத்தனர்.

அவர்களில்   78   பேர்   பெக்கான்  சுங்கை   புசாரைச்   சேர்ந்தவர்கள்,  74  பேர்  பெக்கான்  பாரிட்   பாருவைச்   சேர்ந்தவர்கள்    என    சாபாக்   பெர்ணம்     பேரிடர்    நடவடிக்கை   அறை  பேச்சாளர்   தெரிவித்தார்.
கிளந்தானில்,  நேற்றிரவு   3,325  ஆக   இருந்த   வெள்ள   அகதிகளின்   எண்ணிக்கை   இன்று  காலை   எட்டு  மணி   அளவில்     சிறிது    குறைந்தது.

பேராக்கில்,  நேற்றிலிருந்து   விடாமல்   பெய்யும்   மழையினால்    பல    இடங்களில்   வெள்ளம்   பெருகியதால்    109   குடும்பங்களைச்   சேர்ந்த   334  பேர்   துயர்த்துடைப்பு   மையங்களுக்குக்  கொண்டு    செல்லப்பட்டனர்.
மஞ்சோங்   மாவட்டத்தில்தான்   அதிகமானோர்,  197 பேர்,   பாதிக்கப்பட்டதாக   மாநிலப்   பேரிடர்    மேலாண்மைச்   செயலகம்   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறியது.

அவர்களில்  72 பேர்   ஸ்கோலா   அகாமா   ரக்யாட்    கம்போங்   பாடாங்   செராயில்  தங்கியுள்ளனர்.

125 பேர்  தேவான்   ஓராங்   ராமாய்   இந்திராவதியில்.

சாபாவில்   பைடானிலும்   பித்தாசிலும்   824  பேர்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டுள்ளனர்.   சாபா  முதலமைச்சர்   மூசா    அமான்   இன்று  அவ்விரு   பகுதிகளையும்     பார்வையிடுவார்   என   தேசிய   பேரிடர்    குழுச்  செயலகத்தின்   சாபா   தலைவர்   கர்னல்   முல்யாடி   அல்-ஹமிடி  லாடின்   கூறினார்.

சரவாக்கில்   வெள்ளத்தின்  காரணமாக    எட்டுப்   பள்ளிகள்    இன்னும்    மூடப்பட்ள்ளன.