வோங்: பிளாஸ்டிக்-அல்லாத பைகளைக் கொடுப்பது நோக்கத்தைத் தோற்கடிப்பதாகும்

bagசிலாங்கூர்   அரசு    சில்லறை   வியாபாரிகளை    பிளாஸ்டிக்- அல்லாத   பைகளை   வழங்கும்படி   கட்டாயப்படுத்தாது.    ஏனென்றால்,  அப்படிச்   செய்வது   அதன்  கொள்கையின்   உண்மையான நோக்கத்தை தோற்கடிப்பதாக   அமையும்.

நெகிழிப்  பைகளுக்கு   வியாபாரிகள்   பயனீட்டாளர்களிடம்   20   சென்   வாங்குவதுகூட   அரசுக்குச்  செல்லாது.  ஏனென்றால்   அதன்  மூலமாக   நிதி  திரட்டுவது    அரசின்   நோக்கமல்ல    என்று   சிலாங்கூர்   ஆட்சிமன்ற   உறுப்பினர்    எலிசபெத்   வோங்    கூறினார்.

“நெகிழிப்  பைகளின்   பயன்பாட்டைக்  குறைப்பதுதான்    எங்களின்  நோக்கம்.  மாற்றுப்  பைகளை    நாங்கள்  கொடுக்கப்   போவதில்லை.    பொருள்  வாங்கச்  செல்லும்போது  பயனீட்டாளர்கள்    சொந்த  பைகளைக்  கொண்டு   செல்ல   வேண்டும்     என்பதை     அறிவுறுத்துவதே    எங்களின்  நோக்கம்.

“அதனால்   நெகிழிப்  பைகளுக்குப்  பதிலாகக்    காகிதப்   பைகள்   கொடுப்பது   போன்றவை    அந்த  நோக்கத்துக்கு   ஏற்புடையதல்ல ”,   என  கோம்பாக்கில்   வோங்   கூறினார்.