ஜனவரி முதல் நாள் தேசிய நிலச் (திருத்தம்) சட்டம் 2016 அமலுக்கு வந்திருப்பதை அடுத்து சட்டவிரோதமாக நிலத்தை மேம்படுத்துவோர் உள்பட, சுற்றுச்சூழலுக்குக் கேடு செய்யும் தரப்பினருக்குக் கூடினபட்சம் ரிம1 மில்லியன்வரை அபராதம் விதிக்க முடியும்.
நடப்புச் சட்டங்கள் குற்றவாளிகளைத் தடுக்க உதவவில்லை என்பதை அறிந்து இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறினார்,
இந்தத் தண்டத்தொகை கேமரன் மலையில் நிகழ்ந்ததுபோன்று அரசாங்க நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் காடுகள் அழிக்கப்படுவதையும் தடுக்க உதவும் என்றாரவர்.