இசி-க்கு எதிராக நீதிமுறை மேலாய்வுக்கு வாக்காளர்கள் செய்திருந்த மனு நீதிமன்றத்தில் நிராகரிப்பு

caseகோலாலும்பூர்    உயர்    நீதிமன்றம்,    தேர்தல்   ஆணையத்துக்கு   எதிராக   நீதிமுறை   மேலாய்வுக்குக்   கோரிக்கை   விடுத்து    ஹுலு   சிலாங்கூர்   வாக்காளர்கள்   மூவர்  செய்து     கொண்டிருந்த   மனுவைத்    தள்ளுபடி    செய்தது.

அம்மனு  காலம்   தாழ்த்தி   தாக்கல்    செய்யப்பட்டதாக   அரசுத்தரப்பு    மூத்த   வழக்குரைஞர்கள்     அமர்ஜித்    சிங்கும்    அசிசான்   முகம்மட்   அர்ஷாட்டும்   முன்வைத்த    வாதத்தை   ஏற்றுக்கொண்ட    நீதித்துறை   ஆணையர்   அசிசுல்    அஸ்மி   அதைத்   தள்ளுபடி   செய்தார்.

விண்ணப்பதாரர்கள்   மூன்று   மாதத்துக்குள்    நீதிமுறை  மேலாய்வுக்கு   விண்ணப்பித்திருக்க   வேண்டும்    என்று   கூறும்    எதிர்மனுவை  அமர்ஜித்     நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்திருந்தார்.

அவர்கள்   கடந்த    ஆண்டு   மே   13-இலிருந்து   மூன்று   மாதத்துக்குள்  விண்ணப்பித்திருக்க    வேண்டும்.  மே   13- தான்   இசி   அதன்    அறிவிக்கையை  அரசிதழில்   பதிப்பிட்ட   நாளாகும்.

அம்மூவரும்   தேர்தல்   ஆணையம்   தேர்தல்   தொகுதி   எல்லைகளைத்    திருத்தி   அமைத்ததால்    தாங்கள்   பாதிக்கப்பட்டதாகக்   கூறி   அக்டோபர்  21-இல்தான்   நீதிமுறை  மேலாய்வுக்கு  விண்ணப்பம்     செய்திருந்தனர்.