கல்வியைத் தொடர இந்திய மாணவர்களுக்கு தடை!

education1பினாங்கு மாக் மண்டெனில் வசிக்கும்  வெங்கடேஸ்வரனின்  மூன்று பிள்ளைகள் முறையே   சூர்யா 12, அகிலாண்டேஸ்வரி 11, துரநாயகி 9   ஆகியோர் பள்ளிக்குச் செல்ல கல்வி அமைச்சு பிடிவாதமாய்  அனுமதி  வழங்க மறுத்து வருகிறது. கல்வி அமைச்சின் பொது செயலாளர் டத்தோ  ஸ்ரீ டாக்டர் கயிர் முஹமட் யூசோப் இவர்களுக்கு உத்திரவாதம் அளித்தும்  இந்த பிரச்சனை தீர்ந்தப்பாடில்லை  என்று பிரிடம் (FREEDOM)  இயக்கத்தின்  தலைவர் கணேசன் அவர்கள் விளக்கினார்.

மேலும் அவர்  கூறுகையில் திரு. வெங்கடேஸ்வரனின் மனைவி  தற்போது இவர்களை பிரிந்து இந்தோனேசியா  சென்று விட்டார். மேலும் இவர்களின் திருமணம் பதிவும் செய்யவில்லை. இந்த மூன்று பிள்ளைகளும் கடந்த ஆண்டு 2016 பாதிவரை  பள்ளிச் சென்று கொண்டுதான் இருந்தனர்.

penang educationஆனால் பிறப்பு பாத்திரம் இல்லாத காரணத்தைக் காட்டி திடீரென  பள்ளி செல்ல தடை இவர்களுக்கு விதிக்கப்பட்டது. இவ்வாண்டும் இதுவே  இவர்கள் பள்ளிச்  செல்ல முட்டு கட்டையாய் உள்ளது.

இந்த பிரச்சனைக்குத்  தீர்வாக மேலிடம் கேட்டதற்குகிணங்க திரு.வெங்கடேஸ்வரன்  சட்டபூர்வமாக மரபணு சோதனை மேட்கொண்ட பிறகும் மாநில பதிவு துறை இந்த மூன்று பிள்ளைகளுக்கு பிறப்பு பாத்திரம் வழங்க மறுத்துவிட்டது. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14(1) (b)படி தாய்  அல்லது தந்தை இந்நாட்டு பிரஜையானால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் இந்நாட்டு பிரஜையே என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்  கணேசன்.

ஒரு லாரி ஓட்டுனரான திரு. வெங்கடேஸ்வரன்  மூன்று பிள்ளைகளையும் பராமரிப்பதுகொண்டு  சம்பந்தப்பட்ட  அதிகாரிகளால் அலக்கழிக்கப்பட்டு அவதியுறுகின்றார். கல்வி அமைச்சும் மாநில  பதிவு துறையும்  இந்த குடும்பத்தின் அவல நிலையைக்  கருத்திக் கொண்டு பிரச்சனைக்குத்  தீர்வு காண்பதாய் தெரியவில்லை.