28 சீனச் சுற்றுப்பயணிகளுடன் சென்ற கப்பலைக் காணவில்லை

catamaranநேற்று,      கோத்தா  பாலுவின்   தஞ்சோங்  ஆரு   படகுத்துறையிலிருந்து   பூலாவ்  மங்காலும்    நோக்கிப்  பயணித்துக்  கொண்டிருந்த   கட்டுமரக்  கப்பலொன்று   காணாமல்   போனதாக    நம்பப்படுகிறது.  அதில்   பயணம்   செய்த   31   பேரில்   28  பேர்   சீனாவைச்   சேர்ந்த   சுற்றுப்பயணிகள்.

காலை   மணி  9க்கு   அக்கப்பல்    படகுத்துறையை   விட்டுப்  புறப்பட்டதாக  மலேசிய  கடல்சார்ந்த   அமலாக்க   வாரியம்(எம்எம்இஏ) கூறியது.

“இரவு  9.50க்கு   போலீஸ்   புகார்    செய்யப்பட்டது”, என   அது  தெரிவித்தது.

நேற்றிரவு   10.15க்கு   தனது  ரோந்து  படகான   கிலாட்   36   தேடும்   பணியை    மேற்கொண்டதாக      எம்எம்இஏ     கூறிற்று.  இன்று  கிலாட்   39   படகும்   கே.எம். ப்ரானி   கப்பலும்    தேடும்   பணியில்   சேர்ந்து   கொண்டுள்ளன.

அரச   மலேசியக்  கடல்  படையின்   கே.டி.  கானாஸ்    என்ற  கப்பலும்    தேடும்   நடவடிக்கையில்   ஈடுபட்டுள்ளது