சீனப் புத்தாண்டை யொட்டி மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஓப்ஸ் செலமாட் 10 நடவடிக்கையில் முதல் ஏழு நாள்களில் விபத்துகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு உயர்ந்தது என்றாலும், உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்திருந்தன.
மொத்தம் 11,440 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் மகம்மட் அஹிர் டாருஸ் கூறினார். இது, கடந்த ஆண்டு (ஒப்ஸ் செலாமாட் 8-இல்) பதிவு செய்யப்பட்டதைவிட 642 அதிகமாகும்.
“ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை 123-இலிருந்து 95 ஆகவும் இறந்தவர் எண்ணிக்கை 132-இலிருந்து 100 ஆகவும் குறைந்திருந்தது”, என்றாரவர்.
ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கை ஜனவரி 21 -இலிருந்து பிப்ரவரி 5வரை.