டிரம்பின் பயணத் தடையை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவு

americaஅமெரிக்க   அதிபர்   டோனல்ட்   டிரம்ப்    ஏழு   முஸ்லிம்   நாடுகளின்   குடிமக்கள்    அமெரிக்காவில்   நுழைவதற்கு   விதித்திருந்த   தடை  அமலாக்கப்படுவதை    அமெரிக்க   நீதிபதி   ஒருவர்    தற்காலிகமாக  நிறுத்தி   வைத்திருப்பதாக     ஊடகச்    செய்திகள்   கூறுகின்றன.

நியு   யோர்க்   நீதிமன்றத்   தீர்ப்பின்படி    ஏற்கனவே   அந்நாட்டில்   உள்ள   மேற்படி    நாடுகளின்   குடிமக்களும்   செல்லத்தக்க   விசாக்களுடன்     அந்நாட்டுக்குச்   சென்று   கொண்டிருப்பவர்களும்   அங்கு   தங்கியிருக்கத்     தடை   இல்லை   என   சிஎன்என்  கூறுகிறது.

 

ஜான்  எப்  கென்னடி   விமான   நிலையத்தில்   தடுத்து     நிறுத்தப்பட்ட    இரண்டு   ஈராக்கியர்கள்    சார்பில்    அமெரிக்க    சிவில்  உரிமை    சங்கம்   அவ்வழக்கைத்   தொடுத்திருந்ததாக   மதர்   ஜோன்ஸ்   இணையத்   தளம்    கூறிற்று.

இந்தத்    தடையாணை   தற்காலிகமானதுதான்.  இதை   நிரந்தரமாக்குவது   குறித்து   வோறொரு   நீதிமன்றம்தான்   முடிவு   செய்ய    வேண்டும்.

முன்னதாக,   அதிபர்   டிரம்ப்    90  நாள்களுக்கு   ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்   அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு   தடை விதிக்கப்பட்டுள்ளதாக     அறிவித்திருந்தார்.