ஹாடி: முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வது பாஸின் கடமை

 

Muslimsinpowerமலேசிய அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு இருப்பதை உறுதி செய்வதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெரும் நோக்கத்தை பாஸ் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

கட்சி அதன் நிலையை சிலாங்கூர் மற்றும் கிளந்தானில் மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. திரங்கானு மற்றும் கெடாவில் அது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற விழைகிறது என்று பாஸின் ஹரக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைக்கான 112 இடங்கள் கிடைக்காவிட்டாலும் கூட இஸ்லாத்தைத் தற்காப்பதும் முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வதும் பாஸின் பொறுப்பாகும் என்று ஹாடி கூறினார்.

“நமது வியூகம் அம்னோவின் கர்வத்தை அடக்கும் என்பதோடு நமது நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரும்”, என்றாரவர்.