அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சர்ச்சைக்குரிய பயணத் தடைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை கண்டனம் தெரிவிப்பது சரியல்ல என்கிறார் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின்.
“தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பலர் டிரம்புக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“ஆனால், நம் பிரதமர் கண்டனம் தெரிவிப்பது சரியல்ல. ஏனென்றால், டிரம்ப் செய்வது என்னவென்றால் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார், அவ்வளவுதான்”, என பங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஏழு முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்த டிரம்புக்குக் கண்டனம் தெரிவிக்குமாறு பிரதமருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவது குறித்து கருத்துரைத்தபோது பங் மொக்தார் இவ்வாறு தெரிவித்தார்.
டிரம்பின் தடை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியா 9 -வது இடத்தில் இருப்பதாக தகவல் கசிந்ததை தொடர்ந்துதான் நம்ம பிரதமர் கூவுகிறார்.
மியான்மார் விவகாரத்தில் தெருவுக்கு போன பிரதமர், அமெரிக்க அதிபருக்கு எதிராக தெருவுக்கு போகலாம் கூடவே தடை செய்யபட்ட அந்த ஏழு நாடுகளின் தூதர்களையும் அழைத்து செல்ல வேண்டியதுதானே.
அனைத்தும் மண்ணின் மைந்தர்க்கே [பூமி புத்ராக்கே] என்று 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்குள்ள தலைவர்கள் செய்தார்களே அதைத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பும் செய்கிறார்.’மஹாதிரிசம்’ கொளகைகளைதான் அந்த அமெரிக்க அதிபர் பின்பற்றியிருக்கிறார்.அதனை எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இங்குள்ள பிரதமர் எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும்? இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்.எதட்கும் ஒரு அருகதை வேண்டாமா ? அங்கு அவர் செய்தால் இனவாதம்.இங்கு இவர் செய்தால் ஜனநாயகமா?